
மும்பை, மே 06
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி மும்பைஅணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா.இஷான் கிஷான் களமிறங்கினர் .அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர், இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தனர் .
அணியின் ஸ்கோர் 74 ரன்னாக ரோகித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் மும்பை ரன்கள் குவிக்கும் நிலையில் இருந்தது ..சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுக்களை இழந்தது.சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 45 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்து வந்த பொல்லார்ட் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடி காட்டினார் அவர் 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார் .இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 178 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக சுப்மன் கில் ,விருத்திமான் சஹா களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக விளையாடினர். மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் 11 ஓவர்களில் இருவரும் 100 ரன்கள் சேர்த்தனர் தொடர்ந்து ,சஹா 33 பந்துகளிலும். கில் 34 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.
அணியின் ஸ்கோர் 106 ரன்னாக இருந்தபோது சுப்மன் கில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாஹா 55 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .
இதனை தொடர்ந்து கடைசி 4 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் ஹார்திக் பாண்டியா ,டேவிட் மில்லர் களத்தில் இருந்தனர் .ஹார்திக் பாண்டியா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் மில்லர் அதிரடி காட்ட ,கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்ட்டது. அந்த ஓவரை மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் வீசினார். அந்த ஓவரில் திவாட்டியா 3 ரன்களில் (ரன் அவுட் ) ஆனார். கடைசி 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது ,
அந்த 2 பந்தை எதிர்கொண்ட மில்லர் அதில் ரன் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.