நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நேற்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய பொருளதார நெருக்கடிக்கு அவசரகால சட்டம் தீர்வாக அமையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியே பொதுமக்கள் வீதிகளில் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாது நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தமுடியாது எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
