முசலி பிரதேச சபை உறுப்பினர் திடீரென உயிரிழப்பு

மன்னார் – முசலி பிரதேச சபை உறுப்பினர் ஜபருல்லாகான் பாயிஸ் சுகயீனம் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சில காலம் சுகவீனமடைந்த பிரதேச சபை உறுப்பினர், புத்தளம் புளிச்சாக்குளத்திலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, இவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு முசலி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பொற்கேனி வட்டாரத்தில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா இன்றிரவு புத்தளம் புளிச்சாக்குளம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *