மூதூர் எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அதிகளவான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் இன்று மாலை நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு மாலை 6.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டமையின் காரணமாக எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்றோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
இதன்போது ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்ததானது மக்களை மேலும் கஷ்டத்துக்கு ஆளாக்குவதற்கென்று தெரிவித்தார்.




