எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இது தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,
ஐஓசி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


