
அவசரகாலச் சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
அதில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

