கந்தளாய் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு சேதனப் பசளையின் முக்கியத்துவம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) கந்தளாய் பிரதேசத்தில் கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
இதில் முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டதோடு,இரசாயனப் பசளைக்கும்,சேதனப் பசளைக்கும் உள்ள வேறுபாடுகள், இது பயிர்ச் செய்கையின் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
விளைச்சல் தொடர்பான தரவுகள் தொடர்பாகவும் விவசாய உத்தியோகத்தர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
கந்தளாய் பிரதேசத்தில் இருபது ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகளில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.