பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு அவதூறாக பேசுவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என ஆசிரியர் தொழிற்சங்க கூட்டணி சார்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க பொது செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் வரவுசெலவு திட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாததால் நிதி அமைச்சருடன் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதியமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள இடைத்தரகராக செயற்படுவேன் என கல்விச் செயலாளர் கூறியிருந்தாலும் அவர் தற்சமயங்களில் இப்போது ஊடகங்கள் முன் முட்டாள்தனமாக பேசுகிறார் எனவும் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.





