“பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022” ஆரம்பம்

நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் “பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022” தொடர்பான முன்மொழிவுகளை தெளிவுபடுத்தி ஆரம்பித்துவைக்கும் விஷேட கூட்டம் பிரதேச செயலாளர்  எம்.எஸ்.எம். றஷ்ஷான்  அவர்களின்  தலைமையில் சனிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்து கொண்டார். புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022 இன் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சூழல் மற்றும் பேன்தகு அபிவிருத்தி, சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய நான்கு பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்களை மையமாக கொண்ட வேலைத்திட்டங்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் அவர்களினால் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்டன.

இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், கணக்காளர் றிம்ஷியா அர்சாட், அமைச்சரின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.றிஸ்வான், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.வை.ஜௌபர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம். தஸ்லிம், பிரதேச செயலக அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *