வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேர் நேற்று உயிரிழந்தனர்.
வவுனியா செட்டிகுளத்தில் ஆண் ஒருவரும் (வயது 80), கன்னாட்டி கணேசபுரத்தில் ஆண் ஒருவரும் (வயது 77), கந்தசாமி கோவில் வீதியில் பெண் ஒருவரும் (வயது 91), தேக்கவத்தை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 74), தோணிக்கல் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 83), சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது58) உயிரிழந்தனர் எனத் தெரியவருகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





