நாட்டில் நிலவுகின்ற டொலர்கள் பற்றாக்குறை அது எங்களை மட்டுமல்ல உலகம் முழுவதையும் பாதித்துள்ள ஒரு பிரச்சனை என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ள பல பொருட்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளது.
அத்தகைய அத்தியாவசிய பொருட்களை விரைவில் வெளியில் எடுக்க வேண்டும் என பிரதமரிடம் அறிவுறுத்தியதாகவும் குறிப்பாக இது தொடர்பாக இலங்கை சுங்க மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இது உலகம் முழுவதையும் பாதித்துள்ள ஒரு பிரச்சினை.எந்த பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தாலும் அதற்கு டொலர் அனுப்ப வேண்டும்.
சுற்றுலா துறை மூலமாக 5 பில்லியன் சம்பாதிக்கும் நாம் தற்போது எங்களால் ஒரு டொலர் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.





