
இராஜகிரிய பிரதேசத்தில் வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்த நபரொருவர் 25,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
மேலும் தெரியவருவது,
வெலிக்கடை – இராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த நபரொருவர், வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை படுகொலை செய்துவிட்டு, சுமார் 25000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், இராஜகிரிய வீதியை சேர்ந்த 71 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது குறித்த பெண்ணின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் வெலிக்கடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




