இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும்.
தியாகி திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15 ஆம் திகதி உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார்.
இந்நிலையில் அவரது நினைவு தினம் வருடா வருடம் நினைவேந்தல் வாரமாக தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எனினும், தற்போது நாட்டில அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





