ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாள் இன்றாகும்.
அதையொட்டி, இன்று 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வை, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்தியுள்ளார்.





