நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், முச்சக்கர வண்டியில் வோட்டர் ஜெல் எனப்படும் 27 வெடிபொருட்களையும், 500 டெட்டனேட்டர்களையும் கொண்டு சென்றுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





