
யாழ்ப்பாணம்,மே 08
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் பெற்று வந்த குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமொன்றை இலஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்ததாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை ,நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

