டீசல் தட்டுப்பாடு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தற்போது டீசல் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினால் தனியார் பஸ்களுக்கு டீசலை வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை 25% இற்கும் மேல் குறைவடையும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *