நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான தடையை பரிசீலிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும் வாகனங்களின் இறக்குமதி மட்டுமின்றி தற்போது விதிக்கப்பட்டுள்ள வேறு பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளும் எதிர்காலத்தில் கிடைக்கும் அந்நிய செலாவணி வருவாயை பொறுத்து நீக்கலாம் என அவர் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வர்த்தக சபை ஆன்லைனில் ஏற்பாடு செய்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை வெற்றிகரமாக கொரோனாவை கட்டுபடுத்தியுள்ளதால் சுற்றுலாத்துறையை விரைவில் மீண்டும் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் வழக்கமான முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் இதன் மூலம் நாட்டுக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





