பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் சம்பள பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏற்கனவே மெய்நிகர் கற்பித்தலில் இருந்து விலகிவிட்டனர்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அல்லது பரீட்சைகளை நடத்துவதற்கு முன்னர் தமது பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படாவிட்டால் பெரிய முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





