எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு செவிலியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செவிலியர்களின் கொரோனா கால கொடுப்பனவுகளைக் குறைத்தல், கூடுதல் நேர வேலை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி சமீபத்தில் மதிய உணவு நேரத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் இதற்கு அரசு பதிலளிக்கவில்லை என்றால் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.





