
மஸ்கட்,மே 08
ஓமன் பெட்ரோலிய எண்ணெய் விலையானது சராசரி பட்ஜெட் விலையை விட 29 அமெரிக்க டால்டர் கூடுதலாக உள்ளது. அதேபோல ஓமன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில் ஓமன் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது முதல் காலாண்டில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
தென்கொரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99.4 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாத இறுதிக்குள் தென்கொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியானது 19 லட்சத்து 95 ஆயிரம் பேரல்களாக அதிகரித்தது.
முந்தைய ஆண்டில் இது 12 லட்சம் பேரல்களாக இருந்தது குறிப்பிடத்தகக்து. ஓமன் நாட்டின் கச்சா எண்ணெயில் 2-வது பெரிய இறக்குமதியாளராக இருக்கும் இந்தியாவுக்கான ஏற்றுமதி விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 44.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஓமன் நாட்டின் கச்சா எண்ணெயின் சராசரி விலை மார்ச் மாத இறுதியில் 59.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேரல் ஒன்றுக்கு 79 அமெரிக்க டாலர் என்ற விலையை எட்டியது. இதேபோல கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேரல் ஒன்றுக்கு 49.5 அமெரிக்க டாலர் மட்டுமே விலை இருந்தது. தொடர்ந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.