
உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 2,025
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 25,530
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 62,385
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 22,800
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – 10,480
ஃபைசர் முதலாவது டோஸ் – 943
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 24,023
மொடர்னா முதலாவது டோஸ் – 78
மொடர்னா இரண்டாவது டோஸ் – 42
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




