
தொண்டமானாறு கடல் நீரேரியில், இன்று (26) காலை 80 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கச் சென்றவர்கள், நீரேரியில் சடலமொன்று மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
கோவிலுக்கு வந்த குறித்த வயோதிபர், நீரேரியில் குளிக்க முற்பட்ட போது, நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




