திருகோணமலை மொரவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெலுவ ஓயா நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜயரத்ன இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
எனினும் இதன்போது அமைச்சரிடம் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து எடுத்துக்கூறினர்.
அமைச்சருடன் குறித்த பகுதிக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மொரவெவ பிரதேச சபையின் தலைவர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம், மாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தனர்.





