சட்டவிரோத மணல் அகழ்வு-ஐவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேக நபர்களும், ஐந்து உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேளாமைச்சேனை பகுதியில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார் விஷேட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது ஐந்து உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், அதனுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *