கொழும்பு, மே 09
அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆகையால், அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
