அலரி மாளிகையின் வாயிற்கதவினை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கிருந்த வாகனமொன்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்தநிலையில் அலரி மாளிகையைச் சுற்றி தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

