கொரோனா தொற்று குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

இலங்கையில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 265,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் 3,959 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *