D.A.ராஜபாக்ஷவின் சிலை மக்களால் உடைத்தெறிப்பு

தங்காலை,மே 10

இலங்கை முழுவதும் ராஜபக்ஷக்களுக்கு சொந்தமான சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ஷ சகோதரர்களான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார்.

கொழும்பில் திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தை D.A.ராஜபாக்ஸவின் தங்கல்லயில் அமைந்திருந்த சிலை சற்றுமுன் உடைத்து நொறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *