
கொழும்பு வன்முறையின்போது தப்பிய 50ற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் ஊடுருவக் கூடும் என தமிழ் நாட்டின் கரையோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதிக் போராட்டத்திற்குள் மகிந்த ஆதரவு அணி புகுந்து தாக்கியதனால் ஏற்பட்ட வன்முறையின்போது, சிறைக் கைதிகளும் பயன்படுத்தப்பட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்தாலும், கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வன்முறை இடம்பெற்ற இடத்தில் அகப்பட்டதனால் அதில் இருந்த கைதிகள தப்பி விட்டதாக சிறைச்சாலை ஆணையார் நாயகம் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, 50ற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள், சிறையில் இருந்து தப்பியமை உறுதியாவதனால் இந்தக் கைதிகள் படகுகள் மூலம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ கூடும் என கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், தமிழ் நாட்டின் இராமேஸ்வரம், கோடியாக்கரை, தொண்டி மற்றும் நாகை மாவட்டக் கரையோரங்கள் ஊடாக ஊடுருவும் வாய்ப்பு உள்ளதாக கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

