துப்பாக்கி சூடு சட்ட விரோதமானது: சுமந்திரன்

யாழ்ப்பாணம்,மே 11

வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முப்படைக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொது சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என இராணுவம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவு சட்டவிரோத உத்தரவு என்றும் அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் செயலாளர்களுக்கு அதிகாரம் இல்லை அரசியலமைப்பின் 52(3) என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *