களனியில் வர்த்தகர் ஒருவர் கொலை

களனி,மே 11

களனி – கொள்ளுவத்தை – பிலப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு குறித்த நபர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் நுழைந்த நபரொருவருர் இந்தக் கொலையை மேற்கொண்டதுடன், அங்கிருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர் 69 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, களனி வலயத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழான குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *