ஊரடங்குச் சட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தோப்பூர் பகுதிகள் இன்றையதினம் முடங்கிக் காணப்பட்டது.
இப்பிரதேசங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் இல்லாது வெறிச்சோடிப்போய் காணப்பட்டன.
அத்தோடு கடைகள் மூடப்பட்டு பிரதான வீதிகள் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
பிரதேச செயலகம், தபால் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் வருகைதரவில்லை.



