மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காட்மோர் தோட்ட கல்கந்த பிரிவில் நேற்று முன்தினம் முதல் பெய்த கனமழையால் கல்கந்த பிரிவில் பாரிய மண் மேடு சரிந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு தாழ் இறங்கும் நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது.
பல வருடங்களுக்கு முன் இங்கு தாழ் இறக்கங்கள் காணப்பட்டதால், அங்கு குடியிருக்கும் மக்களை வேறு பகுதில் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வந்தபோதும் அவர்கள் அங்கு செல்லவில்லை என கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அத் தோட்டம் தனியார் துறை என்பது குறிப்பிடத்தக்கது.

