கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிட்டம்புவ பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உயிரிழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மறைவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
“பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, கௌரவ. அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். இது வரை விஷயங்கள் அதிகரிக்க வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது! வன்முறையை நிறுத்துவோம்!” என அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
