
‘மனிகே மஹே ஹித்தே’ என்ற சிங்கள பாடல் பிரபலமடைந்த இலங்கை பாடகி யோகானி தற்போது மும்பையில் இந்திய இசை கலைஞர்களுடன் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாடகி யோகானி,
இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன் எனவும் நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம்.
எனது நாட்டு மக்களுக்கு உதவ, எனது குரலை பயன்படுத்துவேன். நான் எனது நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். நான் மும்பையில் இருந்தாலும், எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக்குழுவினர் எல்லாம் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ எனவும் தெரிவித்தார்.

