பல்லம பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவர் டிராக்டரின் புல்வெட்டும் இயந்திரத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பல்லம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன், பல்லம பிரதேசத்திலுள்ள சேருகெலே என்ற பகுதியில் வசிக்கும் மூன்றரை வயதினை உடைய ஸ்ரீமான் ஹிமாஷ என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
சிறுவனின் தாயின் தம்பி தோட்டத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்த போது சிறுவனும் சென்று டிராக்டரில் அமர்ந்துள்ளான்.
அச் சமயத்தில், டிராக்டரில் இருந்து சிறுவன் தவறி விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குழந்தை பலத்த காயங்களுடன் சிலாபம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
எனினும், சிறுவன் பலத்த காயங்களுடன் சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்தகைய மரணம் குறித்து பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.