அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் இதுவரை 21 கோடியே 36 லட்சத்து 57 ஆயிரத்து 193 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.
அதேவேளை 18 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 907 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் நேற்று செலுத்திக்கொண்டார். 78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியும், 2-வது டோசை ஜனவரி 11-ம் திகதியும் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.