எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுநகர் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பூக்கடையின் உரிமையாளர் தனது மனைவியை தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 35 வயதுடைய இந்திர மல்காந்தி என்ற பெயரினை உடைய இரண்டு குழந்தைகளின் தாயாவார்.
இந்த கொலை கடந்த 26 ம் திகதி இரவு நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருவது,
குடும்பச் சண்டை காரணமாக பிரிந்திருந்த கணவன், மனைவியை சமரசம் செய்வதற்கு எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
எனினும், பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்பதால் மனைவி தனது ஒரு வயது குழந்தையுடன் வீடு திரும்பி உள்ளார்.
இதனையடுத்து, எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள சந்தேக நபரின் வீட்டில், உறவினர்கள் முன்னிலையில் மனைவியின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் கணவர்.
குறித்த பெண்ணை உடனடியாக, எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எம்பிலிப்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.