புதிய பிரதமர் ரணிலுக்கு மஹிந்த மனப்பூர்வமான வாழ்த்து!

புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பதிவில்,

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு வாழ்த்துக்கள், இந்த இக்கட்டான காலகட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *