தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால் அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய முடிவுக்கு வந்து வெளியேறிச் செல்லலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்,
அவர்கள் செல்ல விரும்பினால் கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க விரும்பவில்லை என்றும், அவ்வாறு விலகிச் சென்றாலும் அரசாங்கம் ஒரு போதும் பலவீனமடைந்து வீழப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டன.
ஆனால் எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி குறை கூறுபவர்களாகவும் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலகச் சந்தையில் தற்போதைய நிலவரம் காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
இந்த கடுமையான நிலையை நாமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அரசாங்கம் இது போன்ற ஒரு நிலைமையில் செயல்பட்டிருந்தால் இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.