பிரதமர் மற்றும் அமெரிக்கா தூதுவருக்கிடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங் ஆகியோருக்கிடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என அவர் கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தற்போது தேவையான தீர்வுகளை நீண்ட கால அடிப்படையில் பெற்றுக் கொடுக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பெறுமதியான நகர்வுகளை முன்னெடுக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *