வவுனியா பூந்தோட்டம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று சிறுவர்களுக்கு கொடுப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட கடலைப்பருப்பு பொதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காலாவதியாகிய திகதி குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு காலாவதியாகி பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
கடந்த ஒரு மாதகாலமாக நாடு முடக்கப்பட்டுள்ளது. எனினும் மதுபான விற்பனை நிலையங்கள் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது . இதையடுத்து சில வர்த்தக நிலையங்களின் முன் பின் கதவுகள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் நகரில் மக்களின் நடமாட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றது.
எனினும் நாடு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி திறக்கப்படும் என் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது .
நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு வழங்குவதற்கென தந்தையினால் கொள்வனவு செய்யப்பட்ட கடலைப்பருப்பு பொதிகள் சிலவற்றில் அதன் காலாவதி திகதி கடந்த ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு காலாவதியாகி ஒருமாதமாகிய உணவுப் பண்டங்கள் பயன்பாட்டில் உள்ளமை கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாடு மீண்டும் திறக்கப்படும் போது பொதுமக்கள் உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளை உறுதிப்படுத்தி உன்னிப்பாக கவனித்து உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்வதுடன் காலாவதியாகிய உணவுப்பண்டங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .