ரயில் சேவைகள் குறித்து ரயில்வே திணைக்களம் விடுத்த முக்கிய தகவல்

தூரப் பிரதேச ரயில் சேவைகளை இன்று முதல் குறிப்பிடத்தக்களவில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரையும், கொழும்பு கோட்டை முதல் பதுளை வரையும், மருதானை முதல் பெலியத்தை வரையும் 3 தூரப்பிரதேச ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த ரயில்கள் மீண்டும் குறித்த பிரதேசங்களில் இருந்து புறப்பட்ட இடத்தை மீண்டும் வந்தடையும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *