53 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்

வாஷிங்டன், மே 15

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அப்படி இதுவரை பல்வேறு கட்டங்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று மேலும் 53 செயற்கைக்கோள்களை பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் விண்ணில் செலுத்தியது.

புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *