வெற்றிலைக்கேணி கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வெற்றிலைக்கேணி கொலை தொடர்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாரால் சடலம் கடந்த 11ம் திகதி மீட்கப்பட்டது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *