
கொழும்பு,மே 15
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான யோசனை முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்காவிட்டால் தாம் தனித்து அரசாங்கத்தில் இணைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூடி, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தீர்மானித்தது.
இதேவேளை, இன்றைய அரசியல் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்க்கமான தீர்மானமொன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

