சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று

கொழும்பு,மே 15

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவுகின்ற அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் முக்கியமான சில தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *