21 ஆவது திருத்தம் குறித்து நாளை கலந்துரையாடல் – பிரதமர்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து நாளை திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டு பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மருந்து, உணவு மற்றும் உர விநியோக பிரச்சினைகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்ததை வலியுறுத்திய பிரதமர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் தேவைக்கு செலுத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் உடனடி சவால் என தெரிவித்தார்.

வங்கிகளில் டொலர் தட்டுப்பாடு நிலவி வருவதால், தேவையான நிதியை திரட்ட அரசு தற்போது வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *