பிரதமர் தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவை கூட்டம்

கொழும்பு, மே 16

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜீ.எல். பீரிஸ், அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டரீதியாகவும், நிலையாகவும் முன்னெடுத்துச் செல்ல குறித்த நான்கு அமைச்சுக்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கமளித்துள்ளது.

மேலும், சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 15 அல்லது 20 பேர் கொண்ட சிறிய அளவிலான அமைச்சரவையொன்று அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராஜாங்க அமைச்சுக்களுக்குப் பதிலாக அதிக அளவிலான நிறுவனங்களைக் கொண்டுள்ள அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதியமைச்சுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *